பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடிப்பில் உருவான “மணிகர்ணிகா” வரலாற்று திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

manikarnika

ஜி ஸ்டுடியோஸ் மற்றும் கமல் ஜெயின் இணைந்து மிக பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் திரைப்படம் ”மணிகர்ணிகா – ஜான்சியின் ராணி”. ராதாகிருஷ்ணா ஜாகர்லமுடி மற்றும் கங்கனா ரணாவத் இணைந்து இயக்கும் இந்த படத்தில் ஜான்சிராணியாக பாலிவுட் முன்னணி நடிகை கங்கனா ரணாவத் நடித்திருக்கிறார். மேலும், அங்கிதா லோகண்டே, ஜீஷூ சென்குப்தா,டேனி டென்சாங்போ, அதுல் குல்கர்னி உள்ளிட்டோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மும்மொழிகளில் தயாரிக்கப்பட்டு வரும் இப்படம் ஜனவரி 25-ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் டிரைலர் மூன்று மொழிகளிலும் வெளியாகியுள்ளது. கங்கனா ரணாவத் ராணி லட்சுமி பாய் வேடத்தில் மிரட்டலாக நடித்துள்ளார்.

ராணி லட்சுமி பாய்யாக கம்பீரமான வீரத்துடன் கங்கன நடித்துள்ள ட்ரெய்லர் ரசிகர்களியே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் தமிழ் பதிப்பின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற கங்கன “ ஆக்‌ஷன் காட்சிகளுக்காக தினமும் 10-12 மணி நேரம் நடிக்க வேண்டி இருந்தது. ராணி லட்சுமிபாய் கதாபாத்திரம் வழக்கமான கதாப்பாத்திரம் இல்லை. இது அனைத்து மக்களையும் சென்றடையும் ஒரு கதை” என பேசினார்.