மணிப்பூர் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது!

மணிப்பூர்,

60 தொகுதிகளை கொண்ட மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கடந்த 4ந்தேதி நடைபெற்ற நிலையில் மீதமுள்ள  22 தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெறுகிறது.

மணிப்பூரில் நடைபெறும் தேர்தலில்  இரோம் ஷர்மிளாவின் மக்கள் மறுமலர்ச்சி மற்றும் நீதி கூட்டணி களத்தில் இறங்கி உள்ளது. இருந்தாலும் மணிப்பூரில் பாரதிய ஜனதா மற்றும்  காங்கிரஸ் கட்சிகளிடையேதான் நேரடிப் போட்டி நிலவி வருகிறது.

இத்தொகுதிகளுக்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று முன்தினம்  மாலையுடன் நிறைவடைந்ததால், இன்று, இறுதிக்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது.

வரும் 11-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.