சமூக வலைதளங்களில் கேள்வித்தாள் ‘லீக்’ : மணிப்பூரில் 11ம் வகுப்பு தேர்வுகள் ஒட்டுமொத்தமாக ரத்து

இம்பால்: சமூக வலைதளங்களில் கேள்வித்தாள் லீக் ஆனதால் மணிப்பூரில் 11ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

இதற்கான அறிவிப்பை மாநில கல்வித்துறை அமைச்சர் தோக்சாம் ராதேஷ்யாம் சிங் வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது:

வினாத்தாள்கள் கசிவு தனியார் பள்ளிகளால் நிகழ்த்தப்பட்டால், அவை உடனடியாக அடையாளம் காணப்படும். இதுபோன்ற ஏதேனும் முறைகேடுகளில் ஈடுபட்டால் அரசுப் பள்ளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இறுதி தீர்வு எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. கல்வி துறையில் காப்பியடிப்பது ஒரு பிரச்சினையாக மாறி வருகிறது என்றார்.

மணிப்பூரில் கடந்த 17ம் தேதி முதல் 11ம் வகுப்புகளுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. தேர்வுகள் மார்ச் 26ல் முடிவதாக அறிவிக்கப்பட்டு இருந்தன. தற்போது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், புதியதாக தேர்வுகள் ஏப்ரல் நடத்தப்படும் என்று தெரிகிறது.