மணிப்பூர் தேர்தலில், காங்கிரசுக்கு அடுத்த படியாக இரண்டாவது இடத்தை பிடித்த பாஜக, உதிரிக்கட்சிகள் ஆதரவுடன் முதல் முறையாக ஆட்சியை கைப்பற்றியது.

பாஜவை சேர்ந்த பைரென்சிங் முதல்வராக பதவியேற்றார். தேசிய மக்கள் கட்சியை சேர்ந்த ஜாய் குமார் சிங் துணை முதல்வராக பொறுப்பேற்று கொண்டார்.

முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் பைரென்சிங்  முன்பு, எல்லை பாதுகாப்பு படை வீரராக பணி புரிந்தவர்.  துணை முதல்வர் ஜாய் குமார் சிங் மணிப்பூர் டிஜிபியாக பணியாற்றியவர்.

கான்ஸ்டபிளாக இருந்து டிஜிபிக்கு சல்யூட் அடிக்க வேண்டிய நிலையில் இருந்த பைரென்சிங், இப்போது முதல்வர்.

கான்ஸ்டபிள் முதல் அதிகாரிகள் வரை எல்லோரையும் வேலை வாங்கிய உயரதிகாரியான ஜாய் குமார், தற்போபோது துணை முதல்வர்!

ஓடம் ஒரு நாள் வண்டியில் போகும்.. வண்டி ஒரு நாள் ஓடத்தில் போகும் என்பது இதைத்தானோ!