இம்பால்: போதை பொருள் கடத்தல் வழக்கில் பாஜக தலைவர் விடுவிக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி தமக்கு வழங்கப்பட்ட வீரதீர விருதை திருப்பி தருவதாக அறிவித்து உள்ளளார்.

மணிப்பூரில் போதை பொருள் தடுப்பு திட்டத்தை செயல்படுத்திய உதவி போலீஸ் சூப்பிரண்டு தனோஜம் பிருந்தா என்ற பெண் அதிகாரி, பாஜக முன்னாள் தலைவர் லுகோசி ஜாவ் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தார். அவரது நடவடிக்கைக்கு பாராட்டுகள் குவிந்தன.

இதையடுத்து, அவரை பாராட்டி மாநில அரசின் சார்பில் 2016ம் ஆண்டு முதலமைச்சரின் துணிச்சலான விருது வழங்கப்பட்டது. இந்நிலையில், பாஜக முன்னாள் தலைவர் லுகோசி ஜாவ் உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்க முடியாததால், அவர்களை நீதிமன்றம் விடுவித்தது.

வழக்கு விசாரணை பற்றியும் தமது அதிருப்தியை நீதிமன்றம் வெளிப்படுத்தியது. இதையடுத்த இப்போது எஸ்பியாக உள்ள தானோஜம் பிருந்தா, தனது பதக்கத்தை திருப்பி தருவதாக அறிவத்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் பிரேன் சிங்குக்கு கடிதம் ஒன்றையும் எழுதி உள்ளார். தீரப்பின்படி வழக்கில் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால், கடமையை சரியாக செய்யவில்லை என்று நினைக்கிறேன். எனவே எனக்கு வழங்கப்பட்ட விருதை திருப்பி தருகிறேன் என்று அதில் தெரிவித்துள்ளார்.