இம்பால்:

தொழில்துறை வளர்ச்சிக்காக கஞ்சா பயன்பாட்டை சட்டப்பூர்வமாக்குவது குறித்து ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும் என மணிப்பூர் மாநில முதலமைச்சர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார். இது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

கஞ்சா விற்பனை செய்வது, உபயோகிப்பது சட்டப்படி குற்றம். இது தொடர்பாக அவ்வப்போது பலர் கைது செய்யப்பட்டு வருவதும் வாடிக்கையாக உள்ளது.

இந்த நிலையில், கஞ்சாவை மருந்து பொருளாக  கருதி சட்டப்படி விற்பனை செய்ய வேண்டும் என அண்மை காலமாக பலர் வலியுறுத்தி வருகின்றனர். அதுபோல கஞ்சாவில், வாந்தியை நிறுத்து வது  போன்ற சில மருத்துவ குணங்கள் உள்ளதாகவும் சில ஆய்வுகள் தெரிவிப்பதாக மேற்கோள் காட்டப்பட்டு விவாதிக்கப்படுகிறது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங், “மருத்துவம் மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்காக கஞ்சா உபயோகத்தை சட்டப்பூர்வமாக்க திட்டமிட்டு இருக்கிறோம் என்றும்,  இதுகுறித்து அமைச்சரவையில் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என்று அறிவித்து உள்ளார்.

மேலும், ஏற்கனவே அருணாச்சலப்பிரதேசம், உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங் களில் கஞ்சா பயன்பாடு  மருத்துவ நோக்கத்திற்காக சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தவர் தொழில்துறை வளர்ச்சிக்காக  மணிப்பூரில் விரைவில் கஞ்சாவை சட்டப்பூர்வமாக மாற்றப்படும் என்றும் கூறினார்.