ம்பால்

தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தண்டனை அளிக்கப்பட்ட பத்திரிகையாளர் நீதிமன்ற உத்தரவு அளித்து இரு நாட்கள் கழித்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

மணிப்பூரை சேர்ந்த  பத்திரிகையாளர் கிஷோர்சந்திர வாங்கெம் முகநூலில் பல  பதிவுகளையும் வீடியோக்களையும் வெளியிட்டு வந்தார்.   இவர் கடந்த வருடம் மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் குறித்தும் ஜான்சி ராணி லட்சுமி பாய் பிறந்த நாள் விழா குறித்தும்  வீடியோ பதிவிட்டிருதார்.   அந்த வீடியோவின் அடிப்படையில் இவர் மீது தேச விரோத குற்றச்சாட்டு எழுந்தது.

கடந்த வருடம் நவம்பர் மாதம் 20 ஆம் தேதி கைது செய்யப்பட்ட இவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறை தண்டனை பெற்றார்.   இம்பால் சிறையில் அடைக்கப்பட்ட இவருக்கு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் படி ஜாமீன் வழங்க மறுக்கப்பட்டது.   தனது தண்டனையை எதிர்த்து வாங்கெம் மேல் முறையீடு செய்தார்.

மணிப்பூர் உயர்நீதிமன்றம் இவருடைய சிறை தண்டனையை ரத்து செய்து விடுதலை அளிக்க உத்தரவிட்டது.    நீதிமன்ற உத்தரவுக்குப் பிற்கும் இரண்டு நாட்கள் வாங்கெம் விடுவிக்கப்படவில்லை.   கிட்டத்தட்ட 133 நாட்கள் சிறை தண்டனக்கு பிறகு இன்று வாங்கெம் விடுவிக்கப்பட்டுள்ளார்.