வெப் சீரிஸ் இயக்க 9 இயக்குனர்களை தேடும் மணிரத்னம்..

கொரோனா ஊரடங்கால் திரையுலகம் முடங்கிவிட்டது. ஒடிடி தளங்களுக்கு மவுசு கூடிக்கொண்டே போகிறது. புதிய படங்கள், சீரியல்கள் ஒடிடி தளங்களில் வெளியாகின்றன. தொழில் நுட்பத்தை பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்தி ருக்கும் மணிரத்னம் ஒடிடி தளத்தில் 9 வெப் சீரிஸ்கள் தயாரித்து வெளியிட உள்ளார். வெவ்வேறு அம்சங்களுடன் கூடிய இந்த வெப் தொடர்களை இயக்கும் பொறுப்பை வேறு 9 இயக்குனர்களிடம் ஒப்படைக்க உள்ளார். அதற்காக திறமை யான இயக்குனர்களை தேடி வருகிறார்.


தற்போது மணிரத்னம் பொன்னியின் செல்வன் சரித்திர நாவல் இயக்கி வருகி றார். இதில் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மேலும் ஓகே கண்மணி படத்தின் இரண்டாம் பாகம் இயக்கவும் எண்ணி உள்ளார். மீண்டும் அதில் துல்கர் சல்மான் நடிக்கிறார்.