‘பொன்னியின் செல்வன்’ ; ரிலையன்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் மணிரத்னம்.

இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படமான அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்கப் பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறார்.

தற்போது நயன்தாரா ,விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் ,அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலரை வைத்து ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்கப் போவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாயின.

பட்ஜெட் பெரிதாக இருப்பதால் லைகா நிறுவனம் பின்வாங்கியதாகக் கூறப்படுகிறது. எனவே, தற்போது ரிலையன்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளார் மணிரத்னம்.