பிரபல நடிகை மனீஷா கொய்ராலா ”மதுவால் அழிந்தேன், கேன்சரால் மீண்டேன்” என தனது சுயசரிதை புத்தகத்தில் எழுதியுள்ளார். மேலும், சுயசரிதையில் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த பல்வேறு சம்பவங்களையும் மனீஷா கொய்ராலா குறிப்பிட்டுள்ளார்.

manisha

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் மனீஷா கொய்ராலா. இவர் மணிரத்னம் இயக்கத்தில் பம்பாய் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்தார். அதன்பினர், இந்தியன், முதல்வன், பாபா, மும்பை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தர். அதுமட்டுமின்றி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்த மனீஷா கொய்ராலா பிரபலமடைந்தார்.

2012ம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனீஷா கொய்ராலா திரைத்துறையில் இருந்து விலகி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் தனது வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களை சுயசரிதையாக மனீஷா கொய்ராலா எழுதியுள்ளார். ” ஹீல்டு… புதுவாழ்வு அளித்த கேன்சர்” என்ற பெயரில் தன் சுயசரிதையை எழுதி புத்தகமாக வெளியிட்டுள்ளார். இதனை பென்குயின் பதிப்பகம் அச்சிட்டு வெளியிட்டுள்ளது.

koilrala

தனது சுயசரிதையில், “ அளவுக்கு அதிகமான குடிப்பழக்கத்தினால் எனக்கு கேன்சர் ஏற்பட்டது. நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள், முன்னாள் காதலர் என பலர் எச்சரித்தும் என்னால் குடிப்பழக்கத்தில் இருந்து மீள முடியவில்லை. கேன்சரால் பாதிக்கப்பட்ட நாட்கள் கொடுமையாக இருந்தாலும், அதை தான் என் வாழ்க்கையின் பரிசாகவே கருதுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, ”முன்பெல்லாம் அதிகம் கோபமாகவும், பதற்றமாகவும் இருப்பேன். தற்போது அதிலிருந்து மீண்டு முற்றிலும் அமைதி நிலைக்கு திரும்பியுள்ளேன். என் மனம் தெளிவானது, எனது கண்ணோட்டம் மாறியது “ என சுயசரிதையும் மனீஷா கொய்ராலா எழுதியுள்ளார்.

மதுவுக்கு தான் அடிமையாக இருந்த நிலையில், புற்றுநோய் ஏற்பட்டு அதிலிருந்து மீண்டதன் மூலம் வாழ்வை புரிந்து கொண்டதாகவும் மனீஷா கொய்ராலா சுயசரிதையில் தெரிவித்துள்ளார். புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு தான் சந்தித்த சவால்கள் குறித்தும் மனீஷா கொய்ராலா எழுதியுள்ளார்.