நடிகை மனிஷா யாதவுக்கு கொரோனா தொற்று….!

 

கடந்த வருடம் இந்தியாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், கடந்த 2020-ம் ஆண்டு இறுதியில் ஓரளவு கட்டுக்குள் வந்தது. இதனால் கொரோனா ஊரடங்கு கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்பட்டது.

நிலைமை சரியாகிவிட்டது என நினைக்கும் தருவாயில் கொரோனாவின் இரண்டாம் அலை கோரத்தாண்டவம் மீண்டும் தொடங்கி விட்டது. போன முறையை விட இந்த முறை அதி வேகமாக பரவி வருகிறது கொரோனா.

இந்நிலையில், ‘வழக்கு எண் 18/9’, ‘ஆதலால் காதல் செய்வீர்’, ‘ஒரு குப்பைக் கதை’ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த நடிகை மனிஷா யாதவ் தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்று ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

”கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனிமையில் இருக்கிறேன். ஆனால் உடனடியாக தேறிவிடுவேன் என்று நம்பிக்கையாக இருக்கிறேன். இப்போதைக்கு மோசமாக எதுவும் இல்லை. கொஞ்சம் மூச்சுத்திணறல் மட்டும் அவ்வப்போது உள்ளது. ஆனால், இந்த கொரோனாவை மொத்தமாகத் தாண்டி வருவதே சிறந்தது. எனவே அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக, ஆரோக்கியமாக, முகக்கவசம் அணிந்து இருங்கள்” என்று மனிஷா யாதவ் ட்வீட் செய்துள்ளார்.