சபரிமலையில் திருப்பி அனுப்பப்பட்ட பெண்கள் நக்சல்கள் : பந்தள அரச குடும்ப நிர்வாகி

பரிமலை

பரிமலையில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட பெண்கள் குழுவில் நக்சல்வாதிகள் ஊடுருவி உள்ளதாக பந்தள அரச குடும்ப நிர்வாகி சசிகுமார் கூறி உள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து அங்கு கடும் போராட்டம் நடந்து வருகிறது.    சபரிமலைக்கு வரும் இளம்பெண்களை காவல்துறையினரின் கட்டுப்பாட்டையும் மீறி போராட்டக்காரர்கள் திருப்பு அனுப்பி வருகின்றனர்.    இந்த பகுதிகளில் தற்போது 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.    காவல்துறையினர் ஏராளமானோர் குவிக்கப்ப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இருந்து சென்னையை தலைமையிடமாக கொண்ட மனிதி என்னும் அமைப்பின் சார்பில் 11 பேர் கொண்ட பெண்கள் குழு நேற்று அதிகாலை 5.30 மணிக்கு பம்பை வந்தனர்.   அவர்களில் 6 பேர் இருமுடி அணிந்து கருப்பு உடையுடன் கோவிலுக்கு செல்ல முடிவு செய்து தங்களுக்கு இருமுடி கட்டி தருமாறு பம்பையில் உள்ள அர்ச்சகர்களைக் கேட்டுக் கொண்டன்ர.

அர்ச்சகர்கள் மறுக்கவே அந்த பெண்கள் தாங்களாகவே இருமுடி கட்டிக் கொண்டனர்.    அதை ஒட்டி அங்கு வந்த ஐயப்ப பக்தர்கள் அவர்களை எதிர்த்ஹ்டு பொராட்டத்தில் ஈடுபட்டனர்.   போராட்டக்காரர்கள் எண்ணிக்கை அதிக அளவில்  அந்தப் பெண்களை திரும்பி செல்ல காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.   அதற்கு பெண்கள் குழு மறுத்துள்ளது.

போரட்டக்காரர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக ஜீப்பில் ஏற்றி உள்ளனர்.   அப்போது அந்த பெண்கள் குழு திடீரென பம்பையில் இருந்து சன்னிதானம் செல்லும் பாதையில் ஓடி உள்ளனர்.    அவர்கள் 100 மீட்டர் செல்வதற்குள் சன்னிதானத்தில் இருந்து வந்த பக்தர்கள் அவர்களை விரட்டி அடித்தனர்.    அதனால் பயந்து பெண்கள் திரும்பி ஓடினர்.

அதன் பிறகு காவல்துறையினர் சொற்படி அந்த பெண்கள் தமிழகத்துக்கு செல்ல முடிவெடுத்தனர்.   அதற்குள் அவர்கள் இருந்த காவல்கட்டுப்பாட்டு அறை வாசலில் 100 க்கும் மேற்பட்டோர் திரண்டு சரண கோஷம் எழுப்பினார்கள்.     காவல்துறையினர் அந்த பெண்களை பத்திரமாக தமிழக் அஎல்லையில் கொண்டு  போய் விட்டனர்.   இது தொடர்பாக காவல்துறையினர் 11  போராட்டக்காரர்களை கைது செய்துள்ளனர்.

இது குறித்து பந்தள மன்னர் குடும்ப நிர்வாகி சசிகுமார் வர்மா, “தமிழகத்தை சேர்ந்த மனிதி அமைப்பில் இருந்து வந்த பெண்களில் நக்சலைட் தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாக  தகவல்கள் வந்துள்ளன.    அவர்கள் சபரிமலையின் புகழை கெடுக்கும் சதி திட்டத்துடன் வந்துள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.  அரசு இது குறித்து விசாரணை நடத்த வேண்டும்.” என குறிப்பிட்டுள்ளார்.