பொள்ளாச்சி பாலியல் வழக்கு: ’5வது’ குற்றவாளியாக மணிவண்ணன் கைது

கோவை:

பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 5வது நபராக மணிவண்ணன் என்பவரும் சேர்க்கப்பட்டுள்ளார்.

மணிவண்ணன்

இவர் பொள்ளாச்சி பாலியல் தொடர்பாக புகார் கொடுத்த இளம்பெண்ணின்  சகோதரரை தாக்கிய புகாரில் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய அதிரடி விசாரணையை தொடர்ந்து, தற்போது   ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள  திருநாவுக்கரவு செந்தில், வசந்தராஜா, சபரிராஜ் ஆகியோரு டன் 5வது நபராக  மணிவண்ணன் என்பவரை சேர்த்துள்ளனர்.

குலைநடுங்க வைத்த பொள்ளாச்சி பாலியல் கொடுமை தொடர்பான வழக்கில் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி அளித்த புகாரின்பேரில்  திருநாவுக்கரசு உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். புகார் கொடுத்ததை தெரிந்த திருநாவுக்கரசின் ஆதரவாளர்களான   பார் நாகராஜ், செந்தில், வசந்தகுமார், பாபு ஆகியோர்  மாணவியின் சகோதரரை தாக்கி அடித்து உதைத்தனர்.

இதன் காரணமாக அவர்கள் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்துள்ளனர். இந்த வழக்கில், தலைமறைவாக இருந்து  பொள்ளாச்சி ஆச்சிப்பட்டி பகுதியை சேர்ந்த மணிவண்ணன் என்பவரை போலீசார் தேடி வந்த நிலையில், கடந்த 25-ந் தேதி (பிப்ரவரி)  கோவை கோர்ட்டில் சரண் அடைந்தார்.  அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து, மணிவண்ணன் மீது பாலியல் வன்கொடுமை புகாரும் சேர்க்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 5வது நபராக மணிவண்ணனை போலீசார் இணைத்துள்ளனர். ர்.  இதையடுத்து, மணிவண்ணனை வரும் வெள்ளிக்கிழமை வரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு கோவை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.