பனிச்சரிவில் சிக்கிய நடிகை மஞ்சு வாரியார் மீட்பு…!

இமாச்சலில் பிரேதேசத்தில் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிக் கொண்ட நடிகை மஞ்சு வாரியார் 6 நாட்களுக்குப்பின் மீட்கப்பட்டார்.

சத்ரா பகுதியில் ‘கயாட்டம்’ என்ற மலையாளப் படத்தின் படபிடிப்பு நடந்து வந்தது. இதில் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்து வந்தார். இயக்குநர் சணல்குமார் சசிதரன் இயக்கும் இந்தப் படத்தின் காட்சிகள் இமாச்சலப் பிரதேசத்தில் படமாக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில் அங்கு பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவில் மஞ்சுவாரியர் சணல் குமார் சசிதரன் உட்பட மொததம் 30 பேர் சிக்கிக் கொண்டதாகத் தெரிய வந்தது.

முதல்வர் உத்தரவின்பேரில் நிலச்சரிவில் சிக்கிக் கொண்ட மலையாள படக்குழுவினரை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டனர். இந்நிலையில் மஞ்சு வாரியார் உட்பட கயாட்டம் படக் குழுவினர் அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர்.