ட்விட்டரில் ட்ரெண்டாகும் மங்காத்தா ஹேஷ்டேக்….!

 

நேற்று நடிகர் விஜய் – த்ரிஷா நடித்த கில்லி திரைப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான போது அதை இந்திய அளவில் ட்ரெண்டாக்கி கொண்டாடினர் விஜய் ரசிகர்கள்.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சியில் மங்காத்தா திரைப்படம் இன்று ஒளிபரப்பான நேரத்தில் இருந்தே அதை ட்விட்டரில் ட்ரெண்டாக்கி கொண்டாடி வருகின்றனர் அஜித் ரசிகர்கள்.

ட்விட்டரில் படம் தொடர்பான கருத்துகள் அதிகம் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் மங்காத்தா என்ற ஹேஸ்டேக்கும் இடம்பிடித்துள்ளது ,