மோடி அரசை வீட்டுக்கு அனுப்ப அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரள்வோம்: மன்மோகன் சிங் அழைப்பு
டில்லி:
பாரதியஜனதா அரசை வீட்டுக்கு அனுப்ப, வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து தயாராவோம் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மாற்று கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார்.
பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று நடைபெற்ற பாரத் பந்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்,பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு எல்லை மீறி போய்க் கொண்டு இருக்கிறது. மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இதன் காரணமாக இளைஞர்கள், விவசாயிகள், சாதாரண மக்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆட்சியை பிடிக்கும்போது மக்களுக்கு அளித் எந்தவொரு வாக்குதியையும் நிறைவேற்றாமல், அதற்கு பதிலாக மக்கள் மீது சுமையைத்தான் ஏற்றி வருகிறது/ மக்களின் அபய குரலை உணர்ந்து நாட்டின் இறையாண்மை மற்றும் ஜனநாயகத்தை காக்க அனைத்து எதிர்கட்சிகளும் தங்கள் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு, ஓரணியில் திரண்டு மோடி அரசை வீட்டுக்கு அனுப்ப தயாராக வேண்டும். . பாஜக அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். நாம் இதை பயன்படுத்தி மத்தியஅரசுக்கு எதிரான அணி திரள்வோம்.
இவ்வாறு மன்மோகன் சிங் பேசினார்.