மன்மோகன் சிங் உள்ளிட்ட 14 எம்பிக்கள் கூட்டத்தொடரில் பங்கேற்காமல் விடுப்பு..!

டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட 14 எம்பிக்களுக்கு உடல்நிலை காரணமாக, கலந்து கொள்ளாததால் மாநிலங்களவை விடுப்பு வழங்கி உள்ளது.

14 எம்.பி.க்களில், 11 பேர் தாங்கள் நோய் தொற்றால் பாதிக்கப்படக்கூடிய வயதுடையவர்கள் என்பததை மேற்கோள் காட்டி முழு அமர்வுக்கும் விடுப்பு கோரியுள்ளனர்.

இந்த பட்டியலில் நரேந்திர ஜாதவ், மனஸ் ரஞ்சன் பூனியா, பரிமல் நாத்வானி, நவநீதகிருஷ்ணன், சுஷில் குப்தா, ஆஸ்கார் பெர்னாண்டஸ், அன்புமணி ராமதாஸ்), லட்சுமிகாந்த ராவ், பரிமல் நாத்வானி, மகேந்திர பிரசாத், கென்யே மற்றும் பண்டா பிரகாஷ் ஆகிய எம்பிக்கள் அடங்குவர்.

80 வயதான முன்னாள் பிரதமர் எச்.டி.தேவேகவுடா இதுவரை நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கலந்து கொள்ளவில்லை, மேலும் அவரது வயதைக் கருத்தில் கொண்டு பங்கேற்காமல் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரசின் மாநிலங்களவை எம்.பி. தீபீந்தர் ஹூடா உட்பட குறைந்தது 9  மக்களவை எம்.பி.க்கள் கொரோனாவில் இருந்து மீண்டு வருகின்றனர். தற்போது, ​​காங்கிரஸ், பாஜகவைச் சேர்ந்த தலா 2 எம்.பி.க்கள், டி.எம்.சி, அதிமுக, ஆம் ஆத்மி மற்றும் டி.ஆர்.எஸ் கட்சிகளில் தலா ஒருவர், கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கார்ட்டூன் கேலரி