மும்பை

ந்தியப் பொருளாதாரத்தை சீர்திருத்துவது குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசனைகள் தெரிவித்துள்ளார்.

மும்பை சர்ச் கேட் பகுதியில் உள்ள வாங்கடே விளையாட்டு அரங்கில் நடந்த ஒரு நிகழ்வில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துக் கொண்டார்.  இந்த நிகழ்வில் தொழிலதிபர்கள்,  அதிகாரிகள், மற்றும் ஊடகவியலர்கள் கலந்துக் கொண்டு மன்மோகன் சிங் இடம் கேள்விகள் எழுப்பினார்கள்.  அவற்றுக்கு மன்மோகன் சிங் பதில் அளித்தார்.

இந்த கூட்டத்தில் பிஎம்சி வங்கியின் முதலீட்டாளர்கள் சார்பில் 15 பிரதிநிதிகள் சந்தித்தனர்.   அவர்களிடம் மன்மோகன் சிங், “பி எம் சி விவகாரம் குறித்த முழு விவரங்கள் நாடாளுமன்ற அவையில் வரும் குளிர்காலத் தொடரில் வெளியிடப்படும் என நினைக்கிறேன்.

ரிசர்வ் வங்கி ஓர் பெரிய தேசிய அமைப்பு. அந்த அமைப்பு இதற்கு ஒரு சரியான தீர்வு காணும் என நினைக்கிறேன்.  அத்துடன் பிரதமர், மகாராஷ்டிர அரசு மற்றும் நிதி அமைச்சரும் இதற்கு ஒரு தீர்வு காண உதவுவார்கள் என நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.

மன்மோகன் சிங் இடம் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, “கடந்த நான்கு காலாண்டுகளாக மகாராஷ்டிரா உற்பத்தி துறை கடும் சரிவைச் சந்தித்து வருகிறது.   இவை இல்லை என்றால் மகாராஷ்டிரா வெகு விரைவில் முன்னேறி விடும்.  எனவே இவற்றைக் களைய அரசு முன் வர வேண்டும்.

மாநிலத்தில் உள்ள இளைஞர்களில் மூன்றில் ஒருவர் பணி இன்றி இருக்கிறார்.  இதனால் அவர்கள் மனதில் சோர்வு அடைந்து மாநிலத்தை விட்டு வெளியேறுகின்றனர்.  ஒரு காலத்தில் முதலீடுகளை ஈர்ப்பதில் முதல் இடத்தில் இருந்த மகாராஷ்டிரா தற்போது விவசாயிகள் தற்கொலையில் முதல் இடத்தில் உள்ளது.

சமீபத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடும் அறிக்கைகளைப் பார்க்கும் போது பாஜக அரசு மக்களின் தேவைக்கேற்றா கொள்கைகளை அமல்படுத்த விரும்பாதது போல் உள்ளது.   பொருளாதார சீர்திருத்தம் மேற்கொள்ளும் முன்பு நிதி அமைச்சர் தனது குறைகளை ஆராய்ந்து அவற்றைத் திருத்திக் கொள்ளவேண்டும்” என தெரிவித்துள்ளார்.