மன்மோகன் சிங் உடல்நிலையில் முன்னேற்றம் : எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிப்பு

--

டில்லி

டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங் ஒரு பொருளாதார நிபுணர் ஆவார்.  இவர் கடந்த 2004 முதல் 2014 வரை இந்தியப் பிரதமராகப் பணி புரிந்துள்ளார்.  உலக அளவில் பொருளாதார மந்த நிலை எற்பட்ட போது இவர் எடுத்த நடவடிக்கைகள் இந்தியாவின் பொருளாதார மேம்பாட்டுக்கு உதவி செய்துள்ளது.

மன்மோகன் சிங்குக்கு தற்போது 87 வயதாகிறது.  இவருக்கு திடீரெ என நெஞ்சு வலி ஏற்பட்டதால் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மன்மோகன் சிங் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாக எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவக்குழு அறிவித்துள்ளது.