டில்லி

ன்மோகன் சிங் போல படித்த பிரதமர் இல்லாமல் நாட்டு மக்கள் தவித்து வருகின்றனர் எனடில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறி உள்ளார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் லண்டன் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர் ஆவார்.  இவர் டில்லி பல்கலைக்கழகத்தில் பொருளாதார துறை பேராசிரியர் ஆகவும், ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும் பணி ஆற்றியவர்.

தற்போதைய பிரதமரான மோடியின் பட்டம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் உள்ளன.   அவருடைய கல்வித் தகுதி பற்றி தகவல் அறியும் சட்டத்தின் கீழ் எழுப்பப் பட்ட  கேள்விகளுக்கு இதுவரை பதில் வரவில்லை.

இந்நிலையில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “பண மதிப்பிழபு கொள்கையால் இந்தியாவில் முதலீடுகளின் எதிர்காலம் ஒரு நிச்சயமற்ற தன்மையை அடைந்துள்ளது.    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் போல ஒரு படித்த பிரதமர் இல்லாமல் மக்கள் தவிப்பில் ஆழ்ந்துளனர்.   பிரதமர் படித்தவராக இருக்க வேண்டும்” என அறிவித்துள்ளார்.

ஏற்கனவே பிரதமர் மன்மோகன் சிங்கை கடுமையாக விமர்சித்துள்ள கெஜ்ரிவால் தற்போது புகழாரம் சூட்டுவது மோடியை மறைமுகமாக தாக்குவதற்காகவே என ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.