டில்லி:

ன்னைவிட பிரதமர் பதவிக்கு தகுதி வாய்ந்தவர் மன்மோகன்சிங்  என்று டில்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கூறினார்.

உடல்நிலை காரணமாக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகிய சோனியா காந்தி, டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது,

ஜனநாயகத்தில் எதிர்ப்புகளும், விவாதங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடியதே என்ற அவர், வாக்குவாதமும், சொற்றொடர்களும் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என்று கூறினார்.

தன்னைப்பற்றி மக்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் எனப்து குறித்த தகவல் என்னை வந்தடையவில்லை என்ற அவர், நான் தலைவரா  அல்லது வாசிப்பாளரா என்பதும் தெரியவில்லை என்றார்.

வர உள்ள  பாராளுமன்ற தேர்தலை சந்திக்க புதிய முறையை கையாள வேண்டும் என்ற சோனியா, தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தயாராக உள்ளது என்று கூறினார்.

தன்னை ஒருசிலர் மீண்டும் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால், கட்சி அனுமதித்தால் நான் தேர்தலில் போட்டியிட தயாராக உள்ளேன் என்றும் கூறினார்.

எனது எல்லை எது என்பது தனக்கு தெரியும் என்ற சோனியா, அதன் காரணமாகவே காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின்போது, பிரதமராக மன்மோகன் சிங்கை தேர்வு செய்தேன் என்றும்,  மன்மோகன்சிங் என்னைவிட பிரதமர் பதவிக்கு தகுதி வாய்ந்தவர் என்பதை அறிவேன் என்று வெளிப்படையாக பேசினார்.

மேலும், பாஜக காங்கிரஸ் கட்சியை முஸ்லிம் கட்சி என்று பிரசாரம் செய்து வருகிறது என்று குற்றம் சாட்டிய சோனியா, நானும்,  ராஜீவ் காந்தியும் பல கோவில்களுக்கு சென்று வந்துள்ளோம் , ஆனால், நாங்கள் அதை வெளியில் காட்டிக்கொள்ள விரும்பில்லை என்றார்.

காங்கிரசை நேரு குடும்பத்தினர் மட்டும்தான் காப்பாற்ற வேண்டுமா என சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். ஆனால், நேரு குடும்பத்தை சாராத மற்றவர்களாலும் காங்கிரசை காப்பாற்ற முடியும் என்று கூறினார்.

வர உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள,ஒரு மித்த கருத்துடைய கட்சிகளை ஒருங்கிணைக்க முயற்சி செய்வேன் என்ற சோனியா,  நமது சுதந்திரம் மீது தாக்குதல் நடத்தப்படும் அபாயம் உள்ளது என்றும்,  வன்முறையாளர்கள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள் என குற்றம் சாட்டியவர், இதனால் நல்லுறவு நல்லிணக்கம் பாதிக்கப்படுகிறது என்றார்.

காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தலைவர் ராகுல்காந்தி மீது தனது கருத்துக்களை திணிப்பதில்லை என்ற சோனியா, மூத்த தலைவர்கள் ராகுலை புறக்கணிப்பதாக கூறுவது தவறு.

இவ்வாறு சோனியாகாந்தி பேசினார்.