புதுடெல்லி:

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தமிழகத்திலிருந்து ராஜ்யசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.


முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ராஜ்யசபை உறுப்பினராக உள்ளார், அவரது பதவிக் காலம் ஜுன் 7-ம் தேதியுடன் முடிகிறது.

அசாமிலிருந்து 2 ராஜ்யசபை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் ஜுன் 7-ம் தேதி நடக்கிறது.
ஆனால், காங்கிரஸுக்கு அங்கு போதிய எம்எல்ஏக்கள் இல்லை.

மத்திய பிரதேசம் போபால் தொகுதியில் போட்டியிடும் திக்விஜய் சிங் வெற்றிபெற்றால், அவர் வகித்து வரும் ராஜ்யசபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வார்.

அந்த இடத்துக்கு நடக்கும் தேர்தலில் மன்மோகன் சிங் போட்டியிடக் கூடும். தமிழகத்தில் கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் வெற்றிபெற்றால், அவர் ராஜ்யசபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வார்.

அந்த இடத்தில் மன்மோகன் சிங்கை போட்டியிடச் செய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலினிடம் காங்கிரஸ் தரப்பில் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிகிறது.

இந்த வாய்ப்புகளை விட்டால், அடுத்து ராஜ்யசபை உறுப்பினராக 2020 வரை மன்மோகன் சிங் காத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.