ண்டன்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பாகிஸ்தான் மீது போர் தொடுக்கத் தயாராக இருந்ததாக முன்னாள் இங்கிலாந்து பிரதமர் டேவிட் காமரூன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பிரதமராக மன்மோகன் சிங் கடந்த 2004 முதல் 2014 ஆம் ஆண்டு வரை பதவி வகித்து வந்தார்.  அப்போது அவர் எடுத்த பொருளாதார மேம்பாடு மற்றும் வெளியுறவு குறித்த நடவடிக்கைகள் இன்றும் உலகளவில் போற்றப்பட்டு வருகின்றன.     இங்கிலாந்து நாட்டின் பிரதமராக கடந்த 2010 முதல் 2016 வரை டேவிட் காமரூன் பதவி வகித்து வந்தார்.

டேவிட் காமரூன் தனது பதவிக்காலத்தில் இந்தியாவுக்கு மூன்று முறை வந்துள்ளார்.   அவர் தனது பதவிக்கால நிகழ்வுகள் குறித்து ஒரு புத்தகம் எழுதி உள்ளார்.  அந்தப் புத்தகத்தில் தனது பதவிக்காலத்தில் இந்தியாவின் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் குறித்து புகழாரம் சூட்டி உள்ளார்.   மன்மோகன் சிங் ஒரு ’புனிதமான மனிதர்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது புத்தகத்தில், “எனக்கு மன்மோகன் சிங் குறித்து நன்றாகத் தெரியும் அவர் ஒரு புனிதமான மனிதர் ஆவார்.   அதே நேரத்தில் இந்தியாவுக்கு மிரட்டல் ஏற்பட்டபோது மிகவும் கடுமையான மனிதராகவும் இருந்து வந்தார்.  கடந்த 2011 ஆம், வருடம் மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது அவரை மிகவும் கோபம் அடையச் செய்தது.

 

அவரை நான் சந்தித்த போது இது குறித்து அவர் என்னிடம் பேசி உள்ளார்.   பாகிஸ்தான் மீது தாம் மிகவும் கோபம் அடைந்துள்ளதாகவும்,  மீண்டும் மும்பை தாக்குதல் போல் மற்றொரு தீவிரவாத தாக்குதல் நடைபெற்றால் பாகிஸ்தான் மீது போர் தொடுக்கத் தயாராக இருந்ததாக அவர் என்னிடம் தெரிவித்துள்ளார்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.