திடீர் நெஞ்சுவலி – எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் மன்மோகன்சிங்!

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங், திடீர் நெஞ்சு வலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2004 முதல் 2014ம் ஆண்டுவரை இந்தியாவின் பிரதமராக இருந்தவர் காங்கிரஸ் கட்சியின் டாக்டர். மன்மோகன்சிங். 2007-08 காலகட்டத்தில், உலகளவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டபோது, இந்தியப் பொருளாதாரத்தை சிறப்பாக கட்டிக்காத்த பெருமை இவருக்கு உண்டு.

தற்போது 87 வயதாகும் மன்மோகன் சிங்கிற்கு, திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், அதன்பொருட்டு, அவர் டெல்லியின் புகழ்பெற்ற எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மன்மோகன்சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவலால் பல வட்டாரங்களிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.