‘மன் பைரங்கி’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்….!

பிரதமர் நரேந்திர மோடி வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட மேலும் ஒரு பையோ பிக் திரைப்படம் ‘மன் பைரங்கி’ எனும் பெயரில் உருவாகவுள்ளது.

இத்திரைப்படத்தை பிரபல பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்கிறார். நரேந்திர மோடியின் 69-வது பிறந்தநாளான நேற்று இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

முன்னதாக மக்களவை தேர்தல் காலத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறைச் சொல்லும் ‘பிஎம் நரேந்திர மோடி’ என்ற திரைப்படம் வெளியானது. விவேக் ஓபராய் நடிப்பில் உருவான இத்திரைப்படத்திற்கு மோசமான விமர்சனங்கள் குவிந்தது என்பது குறிப்பிடத்தக்கது .

You may have missed