திமுக எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜாவுக்கு கொரோனா…

சென்னை: மன்னார்குடி தொகுதி திமுக எம்எல்ஏவும், திமுக எம்.பி. டி.ஆர்.பாலுவின் மகனுமான டி.ஆர்.பி.ராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் உள்ளது.  நேற்று 3,914 பேர் பாதிக்கப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு 6,87,400 ஆக உயர்ந்துள்ளது. அதிக பட்சமாக சென்னையில், நேற்று 1,036 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு   1,89,995 ஆக உயர்ந்துள்ளது. அதேவேளையில், மக்கள் சேவையில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில் மன்னார்குடி தொகுதி  திமுக சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து டி.ஆர்.பி.ராஜா வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாக அறிவித்து உள்ளார்.  அவருடன்நேரடி தொடர்பில் இருந்தவர்கள் தொற்று சோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.