சசிகலா, பன்னீரை கிண்டலடித்த மனோபாலா!:

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரை கிண்டலடித்து நடிகர் மனோபாலா, வாட்ஸ்அப்பில் பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காரணம், இவர் அதிமுக தலைமைக் கழக  பேச்சாளரும் ஆவார்.

 

 

இது பற்றி அதிமுக பிரமுகரும் நடிகருமான  ஆலந்தூர் சினி.சரவணன் மனோபாலா மீது, கட்சி மேலிடத்திலும் காவல்துறை ஆணையரிடமும் புகார் அளிக்க உள்ளதாக  தெரிவித்தார்.

“மனோபாலா, அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர் அவருக்கு மாறுபட்ட கருத்து இருந்தால் நடிகர் ஆனந்தராஜ் போல் பேட்டி அளித்து கட்சியை விட்டு வெளியேறட்டும்.   ஆனால் கட்சிக்குள் இருந்து கொண்டே இது போன்று தனது வாட்ஸ்அப் குரூப்பில் பதிவிடுவது கட்சி விரோத செயல்.

மேலும், முதல்வர் பற்றி  அவர் அவதூறாக பதிவிட்டுள்ளதால் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்போகிறேன்” என்று தெரிவித்தார்.