மனோகர் பாரிக்கர் ராஜினாமாவை பாஜக தடுத்ததா? : புதிய தகவல்

--

னாஜி

டல் நிலை காரணமாக கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் பதவி விலக இருந்ததை பாஜக மேலிடம் தடுத்ததாக கோவா மாநில அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


மத்திய பாஜக அரசில் மனோகர் பாரிக்கர் பாதுகாப்புத் துறை அமைச்சராக பதவியில் இருந்தார். அதன் பிறகு அவர் ராஜினாமா செய்து விட்டு கோவா மாநில முதல்வர் பதவியை ஏற்றுக் கொண்டார். சுமார் 62 வயதாகும் கோவா முதல்வர் மனோகர் பாரிகர் கணைய அழற்சி காரணமாக மும்பை லீலாவதி மருத்துவமனையில் கடந்த பிப்ரவரி மாதம் அனுமதிக்கப்பட்டார்.

அதன் பிறகு அமெரிக்கா சென்று மேல் சிகிச்சை எடுத்துக்கொண்டார். அதற்குப் பிறகுடில்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது மருத்துவர்கள் ஆலோசனைப்படி பூரண ஓய்வு எடுத்து வருகிறார். இதனால் ஆட்சி முடங்கிஉள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன.

இந்நிலையில் கோவா மாநில வேளான்மை துறை அமைச்சர் விஜய் சர்தேசாய், “முதல்வர் மனோகர் பாரிக்கர் விநாயக சதுர்த்தி சமயத்தில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றார். அப்போதே அவர் பதவி விலகுவதாகவும் தனது பொறுப்புக்களை மற்ற அமைச்சர்களுக்கு ஒதுக்க விரும்புவதாகவும் தெரிவித்தார். ஆனால் கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகள் அவர் பதவி விலகுவதை தடுத்தனர்” என கூறி உள்ளார்.

கோவா மாநில அரசியல்வாதிகளிடையே இந்த தகவல் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.