பனாஜி:

கணைய அலர்ஜி காரணமாக கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மும்லை லீலாவதி மருத்துவமனையில் கடந்த 15ம் தேதி முதல் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் தீவிர சிகிச்சைக்கு பின்னர் அவர் குணமடைந்தார். இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்ப்டடார். கோவா திரும்பிய அவர் வீட்டிற்கு சென்றார். பின்னர் சட்டமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தொடர்ந்து அவர் சட்டமன்ற வளாகத்தில் அமைச்சரவை கூட்டத்தை நடத்தினார்.

இது குறித்து துணை சபாநாயகர் மைக்கேல் லோபோ கூறுகையில், ‘‘பாரிக்கர் தனது மன தைரியத்தில் விரைந்து குணமடைந்துள்ளார். அவர் நிச்சயம் பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்று எதிர்பார்த்தேன். அதேபோல் வந்துவிட்டார்’’ என்றார்