மனோகர் பாரிக்கர் உடல் நிலை முன்னேற்றம்….கோப்புகளில் கையெழுத்திடுகிறார்

டில்லி:

மனோகர் பாரிக்கர் உடல் நிலையில் முன்னேற்றம் அடைந்து வருகிறார். கோப்புகளில் கையெழுத்திடவாக கோவா அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கோவா முதல்-வர் மனோகர் பரிக்கர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் 3 மாதங்கள் வரை அவர் சிகிச்சை பெற்று கோவா திரும்பினார். இங்கு வந்த சில நாட்களிலேயே மீண்டும் கோவா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

நோயின் தன்மை தீவிரம் அடைந்ததால் கடந்த 15-ம் தேதி டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர் பிரமோத் கார்க் தலைமையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் 8 மாதங்களாக அரசு நிர்வாகம் சரியாக செயல்படவில்லை என கோவா பாஜக கூட்டணி கட்சியான மராட்டிய கோமந்தவாடி கட்சி தலைவர் தடீபக் தவாபிகர் குறிப்பிட்டிருந்தார். நிர்வாக பொறுப்புகளை மூத்த அமைச்சர் ஒருவரிடம் வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த கோவா பா.ஜ.க. தலைவர் வினய் தெண்டுல்கர், கோவா முதல்வர் பதவியில் மாற்றம் என்ற பேச்சுக்கு இடமில்லை. மனோகர் பரிக்கர் முதல்வராக தொடர்ந்து நீடிப்பார் என அறிவித்தார்.

இந்நிலையில், மனோகர் பாரிக்கர் உடல்நிலை தேறி வருகிறது. கோப்புகளில் அவர் கையெழுத்திடுவதாக கோவா பொதுப்பணித்துறை அமைச்சர் சுதின் தவலிக்கர் இன்று தெரிவித்துள்ளார். மேலும், அவர் கூறுகையில்,‘‘அவருடைய துறைசார்ந்த அனைத்து கோப்புகளை படித்துப் பார்த்து மனோகர் பரிக்கர் உடனடியாக கையொப்பமிட்டு எங்களுக்கு அனுப்பி வைக்கிறார். இதுவரை எந்த கோப்பும் நிலுவையில் இல்லை’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published.