னாஜி

னது வாழ்க்கையைப் பற்றி அமெரிக்க மருத்துவமனையில் இருந்த போது உணர்ச்சியுடன் கோவா முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கர் எழுதி உள்ளார்.

மறைந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அமெரிக்காவில் சிகிச்சை நடந்த போது தனது வாழ்வை குறித்து ஒரு கட்டுரை எழுதி உள்ளார். அந்த உணர்ச்சி பூர்வ வரிகள் இதோ :

வாழ்க்கை எனக்கு அரசியலில் நல்ல மதிப்பை அளித்துள்ளது. அது தற்போது என் பெயருடன் ஒட்டிக் கொண்டது. நான் கவனித்தவரை எனக்கு எனது பணியை தவிர வேறு எந்த ஒரு கொண்டாட்டமும் இருந்ததில்லை. எனது அரசியல் அந்தஸ்து மட்டுமே உண்மை. நான் எனது வாழ்வை எனது புகழ் மற்றும் என்னிடமுள்ள செல்வம் ஆகியவைகளை எனது வாழ்வின் மைல்கல்களாக கருதி இருந்தேன். அத்துடன் எனது அதிகரிக்கப்பட்ட பெருமையும் சேர்ந்து இப்போது எனது இறக்கும் தருவாயில் என் முன் உள்ளது.

எனது இறப்பின் ஒவ்வொரு நிமிடமும் என்னை நோக்கி வந்துக் கொண்டிருப்பதாக என்னை சுற்றி உள்ள இயந்திரங்களும் அதன் சத்தமும் எனக்கு சொல்கிறது. இந்நிலையில் நான் தேடி வைத்த புகழும் பொருளும் என் வாழ்வை விட அதிகம் மதிப்பு உள்ளதில்லை என தோன்றுகிறது. நான் வாழ்வில் செய்துள்ள சமூக சேவைகள் என்பதை தவிர வேறு ஏதும் எனக்கு உதவாது என தோன்றுகிறது. நான் மீதமுள்ள நிமிடங்களையும் சமூக சேவை செய்வதில் நிறைய நேரம் செலவிட வேண்டும் என தோன்றுகிறது.

நான் அரசியலில் பெற்ற வெற்றி எதையும் என்னுடன் கொண்டு போகப் போவதில்லை. இந்த நோய்ப்படுக்கையில் அனுபவிக்கும் துன்பம் என்பது நம்மை தவிர வேறு யாருக்கும் இருக்காது. நம்மிடமிருந்து நமது வேலையாட்கள், ஓட்டுனர், பணியாட்கள் உள்ளீட்ட யாருடனும் நமது பணியை பங்கிடுவதைப் போல் நோயை பங்கிட முடியாது.

வாழ்க்கை பந்தயத்தில் வெற்றி பெற்ற ஒவ்வொருவரும் ஒரு கால கட்டத்தில் நமது வாழ்க்கை நாடகத்தின் கடைசி காட்சி வரும் போது நாடகம் முடியும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். எனவே நாம் நம்மைப் பற்றி மட்டுமின்றி மற்றவ்ர் மீதும் அக்கறை கொள்ள வேண்டும். பணத்தை மட்டுமல்ல நமது அன்பையும் எவ்வாறு செலவழிக்க வேண்டும் என்பதை கவனிக்க வேண்டும். ஒரு குழந்தை பிறக்கும் போது அது அழுகிறது. ஆனால் அது பெரியதாகி மடியும் போது மற்றவர்கள் அழுகிறார்கள். எனவே இந்த இரு அழுகைக்கு நடுவில் முடிந்த வரை சிரித்து மகிழ்வுடன் வாழ்வோம்.