மனோகர் பாரிக்கர் மிரட்டுகிறார்… ! காங்கிரஸ் குற்றச்சாட்டு

பனாஜி:

ருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபடியே மிரட்டி வருகிறார் என்று கோவா முதல்வர் மனோகர் பரிக்கர் மீது காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

கணைய புற்றுநோய் காரணமாக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், கோவா முதல்வர் மனோகர் பரிக்கர் மாநில ஆட்சியில் கவனம் செலுத்த முடியாத நிலை நீடித்து வருக்றது.  மேலும், கடந்த  2014 – 2017 காலகட்டத்தில் கோவா முதல்வராக இருந்த  லக்ஷ்மிகாந்த் பர்சேகர் மீது சட்டவிரோதமாக சுரங்க ஒதுக்கீடு செய்ததில் ரூ. 1.44 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு அம்மாநில லோக் ஆயுக்தா மூலமாக விசாரணை நடந்து வருகிறது. இதனால் அங்கு  ஸ்திரத்தன்மையற்ற சூழல் நிலவி வருகிறது.

இதன் காரணமாக பாஜகவுக்கு ஆதரவு அளித்த மாநில கட்சிகள், சுயேச்சைகள் தற்போது காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்து வருகின்றன. அதைத்தொடர்ந்து  காங்கிரஸ் கட்சி, மாநிலத்தில் ஆட்சி அமைக்க தங்களிடம் பெரும்பான்மை இருப்பதாக மாநில ஆளுநரை சந்தித்து மனு கொடுத்துள்ளது.

இதன் காரணமாக மாநிலத்தில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், பாஜகவின் கூட்டணிக் கட்சியான கோவா பார்வர்ட் கட்சியின் தலைவர் விஜய் சர்தேசாய், மருத்துவமனையில் இருந்து பாரிக்கர் தன்னிடம் தொலைபேசியில் பேசியதாகவும், நிர்வாக விபரங்கள் குறித்து விவாதித்ததாகவும்  செய்தியாளர்களிம் தெரிவித்தார்.

இந்த கட்சி தற்போது காங்கிரசுக்கு ஆதரவு அளித்து வருகிறது. இது மாநில அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் செல்லக்குமார், மனோகர் பரிக்கர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் குணம்பெறுவார் என்று நமபுகிறேன். அவர் நலம் பெறவும், நீண்ட ஆயுள் கிடைக்கவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்.

ஆனால் அவர் மருத்துவமனையில் இருந்து கொண்டே சில நபர்களை போனில் அழைத்து மிரட்டுவதாக செய்திகள் வருகின்றன. தன் மீது சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுகளில் குற்றம் நிரூபணம் ஆனால் அவர் தனது சொத்துக்களை துறப்பதாக உறுதியளிக்க வேண்டும். பாஜக அரசின் மீது அதிருப்தி கொண்டுள்ள கூட்டணி எம்.எல்.எக்களுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். ஆனால் ஆட்சியமைப்பது குறித்து நாங்கள் அவசரப்படவில்லை

இவ்வாறு அவர் தெரிவித்தார்.