பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரின் ராஜினாமாவை குடியரசு தலைவர் ஏற்றுக்கொண்டார். அவர் வகித்த பாதுகாப்புத்துறையை நிதி அமைச்சர் அருண்ஜெட்லிக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

மனோகர் பாரிக்கர்

சமீபத்தில் கோவாவில் நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 40 தொகுதிகளில் பாஜக 13 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனாலும் கூட்டணி கட்சிகள் மற்றும் இதர சில கட்சிகள் ஆதரவுடன் அக்கட்சி ஆட்சி அமைக்கிறது.

கோவா மாநில முன்னாள் முதல்வரும் தற்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சருமான மனோகர் பாரிக்கர் முதல்வராக பதவியேற்க உள்ளார். ஆகவே தற்போது அவர் வகித்துவரும் பாதுகாப்புத்துறை பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை குடிரசுத்தலைவர் ஏற்றுக்கொண்டார்.

மாற்று ஏற்பாடு செய்யும்வரை பாதுகாப்புத்துறையை கூடுதலாக நிதியமைச்சர் அருண்ஜெட்லி கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.