Random image

கோவா முதல்வராக மனோகர் பாரிக்கர் நீடிப்பார்….பாஜக

பனாஜி:

கணைய பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் 3 மாதங்கள் சிகிச்சை முடிந்து கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் நாடு திரும்பினார். சில நாட்களில் மீண்டும் உடல் நிலை பாதித்தால் கோவா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நோயின் தன்மை தீவிரம் அடைந்ததால் நேற்று மனோகர் பரிக்கர் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குள்ள தனி வார்டில் டாக்டர் பிரமோத் கார்க் தலைமையில் டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். மருத்துவ பரிசோதனைகளும் நடத்தப்பட்டன. அவரது உடல்நிலை பற்றி அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் வெளியிடவில்லை.

கோவா பா.ஜ.க கூட்டணி கட்சியான மராட்டிய கோமந்தவாடி கட்சி தலைவர் தடீபக் தவாபிகர் பனாஜியில் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘மனோகர் பரிக்கர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் கடந்த 8 மாதங்களாக அரசு நிர்வாகம் சரியாக செயல்படவில்லை. எனவே மாநிலத்தின் நிர்வாக பொறுப்புகளை மூத்த அமைச்சர் ஒருவரிடம் வழங்க வேண்டும்’’ என்றார். £ர்.

இதற்கிடையே, எய்ம்ஸ் மருத்துவமனையில் மனோகர் பரிக்கரை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று சந்தித்தார். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் பற்றி டாக்டர்களிடம் அவர் கேட்டறிந்தார்.

இந்நிலையில் கோவா பா.ஜ.க. தலைவர் வினய் தெண்டுல்கர் கூறு¬¬யில்,‘‘ கோவா முதல்வர் பதவியில் மாற்றம் என்ற பேச்சுக்கு இடமில்லை. மனோகர் பரிக்கர் முதல் அமைச்சராக தொடர்ந்து நீடிப்பார்’’ என்றார்.