டில்லி,

கோவா சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் காங்கிரஸ் 17 இடங்களிலும், பா.ஜ.க 13 இடங்களிலும் வெற்றி பெற்றது. மகாராஷ்டிரவாதி சோமந்த கட்சி, கோவா பார்வர்டு கட்சி, சுயேச்சைகள் தலா 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

மனோகர் பாரிக்கர் முதலமைச்சராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் மகாராஷ்டிரவாதி சோமந்தகட்சி, கோவா பார்வர்டு பிளாக் மற்றும் 2  சுயேட்சை வேட்பாளர்கள் பா.ஜ.க வுக்கு ஆதரவு அளித்தனர். இதனால் பா.ஜ.க  ஆட்சி அமைப்பதற்கான சூழல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மனோகர் பாரிக்கருக்கு ஆட்சி அமைக்க ஆளுனர் அழைப்பு விடுத்தார்.

ஆனால், இதை எதிர்த்து காங்கிரஸ்  தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கோவா முதலமைச்சராக  மனோகர் பாரிக்கர் பதவியேற்க தடை விதிக்க மறுத்து விட்டது.  அத்துடன் மனோகர் பாரிக்கர் தனது பெரும்பான்மையை 16 ஆம் தேதி நிரூபிக்க வேண்டும்  என்றும் உத்தரவிட்டது. அதன்படி கோவா சட்டப்பேரவையில் இன்று காலை நம்பிக்கை வாக்கெடுப்பு  நடைபெறுகிறது.

கோவா அரசியல் வட்டாரத்தில் இன்று பரபரப்பான சூழல் காணப்படும் நிலையில்,  மனோகர் பாரிக்கர் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைவார் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங் கூறியுள்ளார்,