டில்லி

றைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை வழக்கு தொடர்பாக சயான் மற்றும் மனோஜ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் கடத்தப்பட்டுள்ளனர் எனவும் தகவல்கள் கூறுகின்றன

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் அவர் உயிருடன் உள்ளபோது கட்சியின் பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் அமைச்சர்களின் மன்னிப்பு கோரிய ஆவணங்களை திருட காவலர் கொல்லப்பட்டதாக தெகல்கா புலனாய்வு இதழின் முன்னாள் செய்தியாளர் ஜேம்ஸ் மாத்யூ குற்றம் சாட்டினார்.

இந்த கொள்ளையில் தொடர்புடையதாக சொல்லப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் விபத்து ஒன்றில் மரணம் அடைந்தார். அத்துடன் மற்றொரு குற்றவாளியான சயான் ஒரு விபத்தில் சிக்கி உயிர் தப்பினார். ஆனால் அவர் மனைவி மற்றும் மகள் விபத்தில் மரணம் அடைந்தனர்.

இவை அனைத்துக்கும் பின்னணியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இருப்பதாக கொலையில் தொடர்புடைய சயான் மற்றும் மனோஜ் தன்னிடம் வாக்குமூலம் அளித்ததாகவும் ஜேம்ஸ் மாத்யூ குறிப்பிட்டார். தற்போது டில்லியில் தங்கி இருக்கும் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு சென்னை அழைத்து வரப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் ஜேம்ஸ் மாத்யூ போலிஸ் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட காரில் கடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார். தாம் அவர்களை இன்றும் சந்தித்ததாகவும் தாம் அங்கிருந்து கிளம்பிய சில நிமிடங்களில் அவர்கள் இருவரும் கடத்தப்பட்டுள்ளனர் எனவும் கூறி உள்ளார்.

அரசியல் உலகில் இந்த செய்திகள் மிகவும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.