எந்திரன் படத்தில் சிட்டி ரோபோவாக நடித்த மனோஜ் பாரதிராஜா …!
— manoj k bharathi (@manojkumarb_76) April 10, 2020
கொரோனா வைரஸின் பரவலைக் தடுக்க, 21 நாள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது மத்திய அரசு.
படப்பிடிப்புகளும் ரத்தான நிலையில், பிரபலங்கள் தங்களின் நேரத்தைச் சமைப்பது, உடற்பயிற்சி செய்வது, பாடுவது, ஆடுவது என தங்களுக்கு பிடித்த செயல்களை செய்வதன் மூலம் உபயோகமாகச் செலவழிக்கிறார்கள்.
அந்த வகையில் தற்போது உங்களுக்கு அதிர்ச்சியையும் வியப்பையும் அளிக்கக்கூடிய த்ரோபாக் புகைப்படங்கள் செம வைரலாகிவருகிறது.
சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து 2010-ஆம் ஆண்டு வெளியான பிரம்மாண்டமான திரைப்படம் ‘எந்திரன்’. இப்படத்தில் துணை இயக்குநராக பணிபுரிந்துள்ளார் மனோஜ்.
நேற்று நடிகர் மனோஜ் பாரதிராஜா ரஜினி மற்றும் ஐஸ்வர்யா ராயுடன் அவர் இருக்கும் புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். அந்த படத்தில் ரஜினிக்கு டூப்பாகவும் மனோஜ் தான் நடித்துள்ளாராம் .