Random image

மானசரோவர் யாத்திரை: தமிழர் பலி

தமிழகத்திலிருந்து மானசரோவர் யாத்திரை ஒருவர் பலியாகியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆண்டிப்பட்டியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். ஓய்வுபெற்ற ஆசிரியர். மானசோரவர் யாத்திரைக்காக குழுவாக இவர் சென்றார்.

 

இந்த நிலையில் மானசரோவர் பகுதியில் கடும் மழை பெய்துவருகிறது. இதனால் பயணிகள் சுமார் 1300 பேர் தங்களது ஊருக்குத் திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள். இவர்களில் 300 பேர் தமிழர்கள். இவர்களில் ஒருவரான ராமச்சந்திரன், கடும் மழையால் ஏற்பட்ட சூழல் மாற்றத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் மரணமடைந்தார்.

மானசரோவர் பகுதியில் சிக்கியுள்ள தமிழர்கள், தங்களைக் காக்க ராணுவ ஹெலிகாப்டரை அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.