பசுமை வழிச்சாலை சர்ச்சை பேச்சு : மன்சூர் அலிகான் கைது

சென்னை

சேலம் – சென்னை பசுமை வழிச்சாலை குறித்து சர்ச்சைக்குரிய முறையில் பேசியதாக நடிகர் மன்சூர் அல்கான் கைது செய்யப்பட்டுள்ளர்.

சேலம் – சென்னை இடையே பசுமை வழிச்சாலை ஒன்றை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.  5 மாவட்டங்கள் வழியாக அமைக்கபட உள்ள இந்த சாலைக்காக 8000 ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்த்ப் பட உள்ளன.    மேலும் வனப்பகுதிகள், ஆறுகள் மற்றும் மலை பிரதேசங்கள் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.   இதனால் மக்களிடையே இத்திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

சேலம் மாவட்ட நீர் நிலைகளை பார்வையிட நடிகர் மன்சூர் அலிகான் கன்னங்குறிச்சி மூக்கனேரிக்கு சென்று சுற்றிப் பார்த்தார்.  அங்கு மரங்கள் நட்ட மன்சூர் அலிகான், செய்தியாளர்களிடம், “சேலம் மாவட்டத்தில் உள்ளநீ நிலைகளில் நீர் நிரம்பி உளது மகிழ்வை அளிக்கிறடு.   இங்கு விமான நிலையம், எட்டு வழிச்சாலை ஆகியவை அமைந்தால் மக்கள் வாழவே முடியாது.

இந்த சாலையால் மரங்கள் மற்றும் மலைகள் அழிந்து வாழ்வாதாரம்  பாதிக்கும்.   இந்த திட்டத்தை மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தக் கூடாது.   இந்த திட்டத்தை எதிர்த்து நடைபெறும் போராட்டங்களில் நான் அவசியம் கலந்துக் கொள்வேன்.  அதையும் மீறி எட்டு வழிச் சாலை அமைத்தால் நான் எட்டு பேரை கொன்று விட்டு சிறை செல்வேன்” எனக் கூறினார்.

இந்த பேச்சு வன்முறையை தூண்டுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் நடிகர் மன்சூர் அலிகானை அவருடைய வீட்டில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  அரும்பாக்கத்தில் உள்ள அவர் வீட்டிலிருந்து அவரை சேலம் அழைத்துச் சென்றுள்ளனர்.    ஏற்கனவே இந்த திட்டத்திக்கு எதிராக போராடியவர்களை வீடு வீடாக தேடிச் சென்று காவல்துறை கைது செய்துள்ளது குறிப்பிடத் தக்கது.