
ஆர்.கே.செல்வமணி இயக்கிய ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முக்கிய வில்லன் நடிகர்களில் ஒருவராக மாறினார் பிரபல நடிகர் மன்சூர் அலிகான்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய மன்சூர் அலிகான், தமிழ் தேசிய புலிகள் கட்சி என்ற ஒரு கட்சியைத் தொடங்கி, கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட்டார். அவருக்கு 41 வாக்குகளே கிடைத்தன.
இந்நிலையில் மன்சூர் அலிகான் சிறுநீரகக் கல் பிரச்சினை காரணமாக அவதிப்பட்டு வந்ததால் சென்னை, அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இன்று (மே.10) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Patrikai.com official YouTube Channel