மன்சூர் அலிகானின் மூன்றாவது மனைவியை கொடூரமாக தாக்கிய இரண்டாவது மனைவியின் வாரிசுகள்

டிகர் மன்சூர் அலிகானின் மூன்றாவது மனைவி வஹிதாவை, இரண்டாவது மனைவியின் வாரிகளான லைலா அலிகான், மீரான் அலிகான் ஆகியோர் கொடூரமாத் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திரைப்பட நடனக்காரராக இருந்த மன்சூர்அலிகான், கேப்டன் பிரபாகரன் படம் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து புகழ் பெற்ற இவர், தற்போதும் சில படங்களில் நடித்து வருகிறார்.

பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட சில கட்சிகளில் சேர்ந்து செயல்பட்டார். சமீபத்தில் எட்டுவழிச்சாலை திட்டத்தை எதிர்த்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியிம் போராட்டம் நடத்தி கைதானார்.

இவருக்கு மூன்று மனைவிகள்.  அவ்வப்போது இவர்களுக்குள் சண்டை ஏற்படுவது வழக்கம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், இவரது இரண்டாவது மனைவி பேபி என்கிற ஹமீதா. இவரது வாரிசுகளான மகள் லைலா அலிகான் (வயது சுமார் 22), மகன் மீரான் அலிகான் (வயது சுமார் 15) ஆகியோர். இவர்கள் இருவரும் சேர்ந்து  மன்சூர் அலிகானின் 3வது மனைவியான வஹிதாவை இரும்பு கம்பிகளால் தாக்கியுள்ளனர்.

ரத்தம் வழிய நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு வந்த வஹிதா, தான் தாக்கப்பட்டது குறித்து புகார் அளித்தார்

அவர்,  மன்சூர் அலிகான், ஹமீதா, லைலா அலிகான் மற்றும் மீரான் அலிகான் மீது புகார் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் நடக்கும் வேளையில் மன்சூர் அலிகான் மற்றும் அவருடைய இரண்டாவது மனைவி பேபி என்கிற ஹமீதா வேடிக்கை பார்த்து கொண்டிருந்ததாகவும் தெரிவித்தார்.

பிறகு வஹிதா  அவருடைய சகோதரியுடன் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். வஹிதா, மன்சூர் அலிகானின் அக்கா மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மன்சூர் அலிகான் மீது ஏற்கெனவே மோசடி வழக்கு, பலாத்கார வழக்குகள் தொடுக்கப்பட்டன. சென்னை திருக்குமரபுரத்தைச் சேர்ந்த பாரி என்பவரின் இடத்தை அவரும் அவரது மனைவி அபிதாபானுவு மோசடி செய்து அபகரித்ததாகவும், சென்னை சூளைமேட்டில் அப்பாவு என்பவருக்கு சொந்தமான 3375 சதுர அடி நிலத்தை நடிகர் மன்சூர் அலிகான் ஆள்மாறாட்டம், செய்து அபகரித்த்தாகவும் புகார்கள் உள்ளன. இது குறித்து வழக்குகள் நடக்கின்றன.

மேலும் மன்சூர் மற்றும் அவரது ரது மனைவி அபிதா பானு ஆகியோர் மீது கொலை மிரட்டல் வழக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.