புதுடெல்லி:
ஏர் இந்தியா ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாகர் கோரிக்கை விடுத்துள்ளார்.

19 வயதான காமன்வெல்த் விளையாட்டு மற்றும் இளைஞர் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற பிஸ்டல் துப்பாக்கி சுடும் வீராங்கனை மனு பாகர், தனது துப்பாக்கியுடன் இந்திய திரும்பிய போது, ஏர் இந்தியா விமான ஊழியர்கள் அவரை தடுத்து நிறுத்தினர்.

துப்பாக்கியுடன் செல்ல அனுமதிக்க முடியாது என்று தெரிவித்த அதிகாரிகள், அவரை வெளியேற விடாமல் தடுத்தனர். இறுதியில் விளையாட்டு அமைச்சர் கிரேன் ரிஜிஜூவின் தலையீட்டிற்கு பின்னர் விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட்டார்.

எதிர்வரும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று இந்தியாவுக்காக பதக்கம் வெல்வார் என்ற நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி வரும் பிஸ்டல் துப்பாக்கி சுடும் வீராங்கனை மனு பாகர், தன்னை வெளியேற உதவிய அமைச்சர் ரிஜிஜு நன்றி தெரிவித்ததோடு, டெல்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினார்.

இந்நிலையில், ஏர் இந்தியா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “மேடம், எங்களுடன் பயணம் செய்யும் போது நீங்கள் எதிர்கொண்ட சிரமத்திற்கு மிகவும் வருந்துகிறோம். உங்களுக்கு உதவ எங்களுக்கு டி.எம். தொடர்பான உங்கள் தொடர்பு விவரங்களுடன் பிரச்சினையின் விவரங்களையும் தயவுசெய்து பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளது.

தனது ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளுடன் பயணிப்பதற்காக அனைத்து ஆவணங்கள் மற்றும் சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (டி.ஜி.சி.ஏ) அனுமதி பெற்றிருந்தாலும், நான், செக்கிங்கை கடந்து செல்ல வேண்டியுள்ளது என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், ஏர் இந்தியா ஊழியர்களின் நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது, குறைந்த பட்சம் விளையாட்டு வீரர்களுக்கு கொஞ்சம் மரியாதை கொடுங்கள், அவர்களை அவமதிக்க வேண்டாம்” என்று அவர் கூறினார்.