டில்லி

ரூ. 2 லட்சம் கோடி அளவுக்கு உற்பத்தித் துறைக்கு ஊக்கத் தொகை வழங்க உள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அமலாக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக உற்பத்தித் துறை பெருமளவில் பாதிக்கப்பட்டது.  ஏற்கனவே நாட்டின் பொருளாதாரம் சரிவை நோக்கிச் செல்வதாக நிபுணர்கள் கவலை தெரிவித்திருந்த வேளையில் அது மேலும் சரிந்தது.  இந்த சரிவை ஈடுகட்ட அரசு உற்பத்தித் துறையை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளைச் செய்துள்ளது.

இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம், “இந்தியாவில் முதலீடுகளை அதிகரிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது.   குறிப்பாக மருத்துவம், மின்னணு உள்ளிட்ட துறைகளில் உற்பத்தியை அதிகரிக்க ஊக்கத் தொகை வழங்கப்பட உள்ளது.

உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகையாக இன்னும் 5 ஆண்டுகளில் ரூ,2 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்படும்.    உற்பத்தியின் அளவைப் பொருத்து ஊக்கத்தொகையாக வழங்கப்படுவதுடன் உற்பத்தி அடிப்படையில் சலுகைகளும் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. எனத் தெரிவித்துள்ளார்.