மனுஸ்மிருதி மொழிபெயர்க்கப்பட்டு கிராமங்களில் விநியோகம் செய்யப்படும்! திருமாவளவன்

சென்னை: மனுஸ்மிருதி மொழிபெயர்க்கப்பட்டு கிராமங்களில் விநியோகம் செய்யப்படும் என  திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விடுதலைசிறுத்தைக் கட்சித் தலைவர் திருமாவளவன்,  இந்து பெண்கள் விபச்சாரிகள் என மனுஸ்மிருதி என்ற நூலில் இருப்பதாக கொளுத்திப் போட்டார். இது தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

திருமாவளவனின் பேச்சுக்கு பாஜக எதிர்வினையாற்றி வருகிறது.  பல்வேறு இடங்களில் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது. அதே வேளையில் விசிகவும்,  மனுஸ்மிருதியை  தடை செய்ய வேண்டும் என்ற போராட்டத்திலும் விசிக குதித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை எழுந்துள்ளது.

இந்த நிலையில் மனுஸ்மிருதி மொழிபெயர்க்கப்பட்டு கிராமங்களில் விநியோகம் செய்ய முடிவு செய்துள்ளதாக திருமாவளவன் தெரிவித்து உள்ளார்.