விமானத்தில் ஏறுவதற்கு முன் தங்களுக்கு பிரியமானவருடன் சில மணித்துளிகள் செலவிட எண்னி பல தில்லி ஜோடிகள் இந்திரா காந்தி விமான நிலையத்தில் நுழைய நியாயமற்ற வழிகளைத் தேர்ந்தெடுக்கின்றனர். சிலர் இரத்தான டிக்கெட்டுடனும் ஓர் சிலர் பழைய டிக்கெட்டில் தேதியை மாற்றியும் விமான நிலையத்தில் நுழைய முயற்சிக்கின்றனர். அதில் பெரும்பாலும் ஆண்கள் தான் தங்களின் காதலியையோ அல்லது தாயையோ அல்லது மகள்களையோ வழியனுப்ப வரும்போது சட்டவிரோதமாக விமான நிலையத்திற்குள் நுழைய முயற்சிக்கிறார்கள்.

ஆனால் இவ்விதமான தீரச்செயல்கள் விமான நிலையத்தில் உள்ள சிஐஎஸ்எஃப் மற்றும் தில்லி போலீஸை எரிச்சலூட்டி, அவர்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்தும் அலுத்துவிட்டனர். சிஐஎஸ்எஃப் அதிகாரிகள், சமீபத்தில் உறவினர்கள் அல்லது நண்பர்களை வழியனுப்ப வருவோர் விமான நிலைய வளாகத்துக்குள் நுழைய போலி டிக்கெட்டுகளைப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது என்று கூறினர்.

கடந்த மாதம் இந்திரா காந்தி விமான நிலையத்தில் விமான நிலைய போலீஸ் போலி டிக்கெட் எடுத்துச் சென்ற இரண்டு பயணிகளைக் கைது செய்தனர். அதின் ஒருவர் தனது நண்பரௌ வழியனுப்ப வந்ததாகவும் வளாகத்துக்குள் நுழைய ஒரு போலி டிக்கெட் பயன்படுத்தியதாகவும் போலீசாரிடம் கூறினார். முற்றம் சாட்டப்பட்ட மற்றொருவரின் டிக்கெட் போலியானது எனவும் அவரது காதலியின் டிக்கெட் செல்லுபடியாகும் என்றும் டிக்கெட்டை சோதனை செய்த சிஐஎஸ்எஃப் அதிகாரிகளால் கண்டறியப்பட்டது.

விமான நிலையத்தின் துணை ஆணையர் சஞ்சய் பாட்டியா, “யார் வேண்டுமானாலும் ஒரு அடையாள அட்டை மற்றும் டிக்கெட்டைக் காண்பித்து விமான நிலைய வளாகத்துக்குள் நுழைய முடியும். சிஐஎஸ்எப் அதிகாரிகள் புறப்பாடு வாயிலில் இதைக் கண்டுபிடித்து டிக்கெட் செல்லாததாக இருந்தால் போலீசாருக்குத் தகவல் அளிக்கின்றனர்” என்று கூறினார்.

சமீபத்தில், 26 வயதான புனாவைச் சேர்ந்த அம்மர் மொஹ்சின் பாக்ஸ்வாலா என்றவர், சிஐஎஸ்எஃப் காவலர்களிடம் ஒரு ஆண்டிற்கு முன் எடுத்த டிக்கெட்டைக் காட்டி, அவரது காதலியைப் பார்க்கப் புறப்படும் ஓய்விடத்திற்குள் நுழைந்தார். தகவல்களின்படி, அவரது காதலியிடம் புணேவிலிருந்து கோவா செல்ல ஸ்பைஸ்ஜெட்டின் ஒரு டிக்கெட் இருந்தது, மற்றும் அம்மரிடம் சென்னை நோக்கிச் செல்லும் இண்டிகோ விமானத்தின் ஒரு போலி டிக்கெட் இருந்தது. அவரது காதலி பாதுகாப்பு சோதனை மூலம் அதைச் செய்தார் பிறகு, அவரது காதலி பாதுகாப்பு சோதனையை முடித்தபிறகு அந்த நபர் புறப்படும் ஓய்விடத்திற்குச் சென்று சிஐஎஸ்எஃப் காவலரிடம் தான் பயணம் செய்ய விரும்பவில்லை என்றும் வெளியே செல்ல வேண்டுமெனவும் கூறினார். இதனால் காவலர்களுக்குச் சந்தேகம் வந்து அவரது டிக்கெட்டைப் பார்த்தபோது அதில் அச்சிடப்பட்டிருந்த வாடிக்கையாளர் அடையாள எண் தவறாக இருந்தது என்று கண்டறிந்தனர். விசாரணையின் போது, பாக்ஸ்வாலா அவரது காதலி வழியனுப்புவதற்காகப் பழைய டிக்கெட் கொடுத்து மோசடி செய்ததாக ஒப்புக் கொண்டார்.

ஒவ்வொரு ஆண்டும், கிட்டதட்ட 50-100 பேர் இது போன்று போலி டிக்கெட்டுகளைப் பயன்படுத்தி விமான நிலையத்திற்குள் நுழைகின்றனர். குற்றஞ்சாட்டப்பட்டவர் இரண்டு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து அதில் ஒன்றை ரத்து செய்து, பின்னர் ரத்து செய்த டிக்கெட்டை வைத்து விமான நிலையத்திற்குள் நுழைகின்றனர். சில நேரங்களில் மக்கள் ஒரு பழைய டிக்கெட்டை பதிவிறக்கி அதில் தேதியை மட்டும் திருத்தி எழுதிவிடுகின்றனர். ”

ஒரு சிஐஎஸ்எஃப் அதிகாரி, “டிக்கெட்டில் இருக்கும் பெயர் எங்களிடம் காட்டப்படும் அடையாள அட்டையோடு பொருந்தினால், நாங்கள் அவர்களைக் கட்டிடத்தின் உள்ளே நுழைய அனுமதிக்க வேண்டும்” என்று கூறினார். குற்றவாளிகள் அல்லாதவர்கள், படித்தவர்கள், வசதியானவர்கள் என அனைத்து விதமான மக்களும் விமான நிலைய பாதுகாப்பை முறியடிக்கொன்றனர். இவர்கள் பிடிபடும் போது, மோசடி மற்றும் அங்கீகரிக்கப்படாத நுழைவு என்று இவர்கள்மீது ஒரு வழக்குப் பதிவு செய்யப்படுகிறது.

இந்தப் பாதுகாப்பு அத்துமீறலினால் தில்லி போலீஸ், தவறான டிக்கெட்டுடன் விமான நிலையத்திற்குள் யாரேனும் நுழைந்தால் அவர்கள்மேல் வழக்குத் தொடரப்படும் என்று அறிவிப்புப் பலகை வைத்துள்ளது. “பல சர்வதேச விமான நிலையங்கள் விமானம் ஏறும் இடம்வரை பார்வையாளர்கள் நுழைவதற்கு அனுமதி வழங்குகிறது, அதனால் வெளிநாட்டவர்கள் கூட அடிக்கடி தவறான டிக்கெட் பயன்படுத்தி விமான நிலையத்திற்குள் நுழைய முயற்சிக்கின்றனர்” என்று பாட்டியா கூறினார். ஒரு ஆண்டு காலமாக சிஐஎஸ்எஃப் தில்லி விமான நிலையத்தில் தானியங்கி மின் வாயில்களை அறிமுகப்படுத்தும் எண்ணத்துடன் உள்ளனர், ஆனால் இதுவரை எதுவும் செய்யப்படவில்லை.