புதுடெல்லி:
த்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2019 மக்களவைத் தேர்தலின்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பலர் மேற்கு வங்காளத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சிக்கு உதவி செய்ததாக தெரிவித்து திடுக்கிட வைத்துள்ளார்.

2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த பலர் மறைமுகமாக எங்களுக்கு ஆதரவளித்தனர், இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை நாங்கள் அவர்களை நேரடியாக பாஜகவில் சேர்க்க தயாராக உள்ளோம் என்று பாங்குறவில் நடந்த கட்சி கூட்டத்தில் பேசிய அமித் ஷா தெரிவித்துள்ளார், இது தற்போது அனைவரையும் திடுக்கிட வைத்துள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த தேர்தலை ஒப்பிடுகையில், 2019 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக ஒரு பெரும் முன்னேற்றத்தைக் கண்டுள்ளது, மேலும் 2016 ஆம் ஆண்டு 10 சதவீதமாக இருந்த வாக்குகள் 2019 ஆம் ஆண்டு 42% உயர்ந்துள்ளது., அதே வேளையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வாக்குகள் 2016 ஆம் ஆண்டு தேர்தலில் 19.75 சதவிதத்திலிருந்து, 2019 ஆம் ஆண்டு 6.28% குறைந்துள்ளது.

இதனை மறைமுகமாக அமித்ஷா இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எங்களுக்கு உதவி செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார், மேலும் மேற்கு வங்கத்தில் பாஜகவின் எழுச்சியைக் கண்டு மம்தா பானர்ஜி பயப்படுவதாககும் இதனால் மத்திய அரசின் பல சமூக திட்டங்களை நடக்க விடாமல் தடுத்து வருகிறார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.