ஸ்ரீநகர்:

ம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளதால் அங்கு அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. இதையடுத்து, அங்கு நடைபெற இருந்த ஏராளமான திருமணங்கள் ரத்து செய்யப்பட்டும், தள்ளி வைக்கப்பட்டும் இருப்பதாக அங்கு வெளியாகி உள்ள பத்திரிகையில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, ஜம்மு காஷ்மீர்,  லடாக் ஆகியவை யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளதால் சர்தார் வல்லபபாய் பட்டேலின் பிறந்த நாளான அக்டோபர் 31 முதல் ஜம்மு காஷ்மீரும் லடாக்கும் தனித்தனி யூனியன் பிரதேசங்களாக இயங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஜம்முவில் கத்துவா மற்றும் சம்பா மாவட்டங்களில் கடந்த 10ந்தேதி முதல்  144 தடை உத்தரவு தளர்த்தப்பட்டதை அடுத்து மக்களின் இயல்பு வாழ்க்கை மீண்டும் திரும்பியுள்ளது. இன்று ஈகைத்திருநாளையொட்டி, பல இடங்களில்   144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக கடந்த ஒரு வாரகாலமாக மூடப்பட்டிருந்த வணிக நிறுவனங்கள்,  பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு உள்ளன.  இருந்தாலும் ஒரு சில இடங்களில் அரசுக்கு எதிராக சிலர் ஆர்ப்பாட்டங்கள் செய்த நிலையில், அவர்களை ராணுவத்தின் பெல்லட் குண்டு மூலம் தாக்குதல் நடத்தி விரட்டியடித்தனர்.

தற்போது அங்கு  நடைமுறையில் உள்ள பாதுகாப்பு சூழ்நிலை காரணமாக பல திருமணங்கள் ரத்து செய்யப்பட்டு எளிய முறையில் நடைபெற்று வருவதாகவும், பல திருமணங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பல இடங்களில் இன்னும் தொலைபேசி, இணையதள வசதி சரியான முறையில் இல்லாத நிலையில், காஷ்மீர் மாநிலத்தில் இந்த மாதம் நடைபெற இருந்த ஏராளமான திருமணங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளன.

அந்த மாநிலத்தில் இருந்து வெளிவரும் தினசரி பத்திரிகை ஒன்றில், இது தொடர்பான விளம்பரங் கள் குவிந்துள்ளன. அதில் ஏராளமான விரங்களில் திருமணம் ரத்து செய்யப்படுவதாகவும், பல திருமணங்கள் தள்ளி வைக்கப்படுவதாகவும் அறிவித்து உள்ளன.