காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் ஏராளமானோர் கொரோனாவால் பாதிப்பு…

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று மேலும் 34 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது. அதுபோல செங்கல்பட்டு மாவட்டத்தில்  இன்று 31 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை (29ந்தேதி மாலை நிலவரப்படி) கொரோனா தொற்றால் 1876 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 796 பேர் நோய் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தற்போதைய நிலையில் 1060 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில்  இன்று 34 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை (29ந்தேதி மாலை நிலவரப்படி) 5242 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2650 பேர் குணமடைந்து இருப்பதாகவும், 2504 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும்,  87 பேர் மரணம் அடைந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உளளது.

இந்த நிலையில், இன்று மேலும் 31 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதன்படி, அதன்படி,
சின்னமலை (St.Thomas Mount)  3 பேர்,  கண்டோன்மென்ட் (Cantonment)  ஒருவர், காட்டாங் கொளத்தூர் 3, திருக்கழுக்குன்றம் 1, அனகாபுத்தூர் 1, செங்கல்பட்டு எம்பிடிஒய் (Chengalpattu MPTY)  1, பல்லாவரம் 8, மதுராந்தகம் 1, பம்மல் 4, தாம்பரம் 6, பீர்க்கங்கரனை 2

கார்ட்டூன் கேலரி