கைரேகை பூட்டு (Finger Print Lock) உட்பட பல புதிய வசதிகள் விரைவில் : வாட்ஸ்அப்

வாட்ஸ்அப் பயனாளர்களின் வசதிக்காக புதிய புதிய மேம்பாடுகளை செய்துவருகிறது.
விரைவில் வரவிருக்க புதிய வசதிகள்

கருப்புத்திரை வசதி :

வாட்ஸ்அப் திரையே முழுதும் கருப்புதிரையில் இயங்கும்படி வரஉள்ள இந்த வசதியானது ஏற்கனவே பீட்டா பதிப்பில் இருந்தது. அதை வாடிக்கையாளர்களின் மதிப்புரைகளுக்குப் பிறகு செலுமை படுத்தி வெளியிடப்பட உளளது.

நிலைதகவலை மறைக்கும் வசதி 

நம்முடைய முகவரிப்பட்டியில் உள்ள சிலர் நம்ம வாட்ஸ்அப் நிலைத்தகவலை (ஸ்டேடஸ்)  குறிப்பட்ட சில நபர்களின் நிலைதகவலை பார்க்காமலிருக்கும்படி செய்யும் வசதி., இதற்காக தனியாகவே Muted Updates section என்ற வசதி வர உள்ளது, எப்போது அந்த நபர்களின் நிலைத்தகவலை பார்க்க விருப்பமோ  அப்போது ‘Show’ என்றுகொடுத்தால் பழைய நிலைமைக்கு திரும்பிவிடும்.

வாட்ஸ்அப் கைரேகை பூட்டு WhatsApp Fingerprint Lock:

ஐபோனில் கொடுக்கப்பட்ட இந்த வசதி இப்போது ஆன்டிராய்டிலும் வர உள்ளது. இதன் மூலம் வாட்ஸ்அப் திறக்கவேண்டுமெனில் நமது கைரேகை வைத்தால் மட்டுமே இயங்கும் படி வசதியை உள்ளிணைத்துள்ளனர்.
இதன் மூலம் வாட்ஸ்அப் செயலியின் பாதுகாப்பு ஒரு படி கூடுதலாக்கப்பட்டுளளது.
விரைவில் முக அடையாள வசதியையும் (Face unlock)   கொண்டுவர உள்ளது

வாட்ஸ்அப் நிலைத்தகவல் பகிரும் வசதி

வாட்ஸஅப் ல் நாம் பதியும் நிலைத்தகவல்களை வாட்ஸ்அப் ஸ்டேட்ஸ் ல் மட்டுமல்ல்லாது, பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஜிமெயில் , கூகிள் போட்டோஸ் போன்றாறவற்றில் பதியும் வசதியை  உருவாக்கியுள்ளது.

வாட்ஸ்அப் மதிப்பு

வாட்ஸ்அப் ல் நாம் யாரை அதிகமாக தொடர்பு கொள்கிறோமோ,  அவர்களை தாமாகவே கண்டறிந்து எல்லா நேரத்திலும் அவர்களை தொடர்பு பட்டியலில் மேலேயே காட்டும் வசதி, இதன் மூலம் குறிப்பிட்ட நபரை தேடவேண்டிய அவசியம் இல்லை.

இதுபோன்ற பல வசதிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கிடைக்க உள்ளது

-செல்வமுரளி

கார்ட்டூன் கேலரி