சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல்! 11 வீரர்கள் பலி!! மோடி வருத்தம்

--

சுக்மா:

த்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நேற்று எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் மீது மாவோயிஸ்ட்டுகள் திடீரென எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் 9  எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இரண்டுபேர் மருத்துவமனையில் இறந்தனர். இதன் காரணமாக  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது

இந்த தகவலை சத்தீஸ்கர் மாநில முதல்வர் ராமன்சிங் உறுதி செய்துள்ளார்.

இந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனமும், காயம் பெற்றவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துவதாகவும், நிலைமை கண்டறிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு உத்தரவிட்டுள்ளதாகவும்  டுவிட் செய்துள்ளார்.